கல்லூரி மாணவி கடத்தல்..! பெண் தராத ஆத்திரத்தில் துணிகரம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூரில் பட்டப்பகலில் ஆம்னி வேனில் 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்ட மாணவியை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். இதில் மாணவிக்கு தாய் மாமன் உறவுமுறை கொண்ட நபரே மாணவியை கடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் திருமணத்துக்கு பெண் தராத ஆத்திரத்திலேயே குடும்பத்தாரின் தூண்டுதலின் பேரில் மாணவியை கடத்தியதும் அம்பலமாகியுள்ளது. 

கரூர் ஈசநத்தம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் நிலையில் சம்பவத்தன்று ஈசநத்தம் பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து மூலம் பொன்நகர் பகுதிக்கு சென்றுள்ளார். ஈசநத்தம் பகுதியில் இருந்து கிளம்பி பேருந்து மூலம் பொன்நகர் பகுதிக்கு சென்று பின் அங்கிருந்து சக மாணவிகளுடன் இணைந்து நடந்தே கல்லூரிக்கு செல்வது மாணவியின் வழக்கம். அதுபோலவே சம்பவத்தன்று மதியம் 12.30 மணியளவில் சக மாணவிகளுடன் கல்லூரிக்கு நடந்தபடி சென்றுள்ளார் மாணவி. அப்போது மாணவியின் அருகில் மின்னல் வேகத்தில் ஆம்னி வேன் ஒன்று சடாரென வந்து நின்றுள்ளது. 


அடுத்து நடந்தவை எல்லாமே சினிமாவை மிஞ்சிய காட்சிகளாகவே இருந்தது. கதவுகள் படாரென திறக்கப்பட்டு ஆம்னி வேனில் இருந்து இறங்கிய 3 பேர் கொண்ட கும்பல் மாணவியை வலுக்கட்டாயமாக வேனில் இழுத்துப்போட்டுக்கொண்டு சட்ரென சீறி கிளம்பினர். தன்னை காப்பாற்றுமாறு வேனில் மாணவி அலறியதை பார்த்த சக மாணவிகள் உடனடியாக தான்தோன்றிமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்க, உடனே SPOT-க்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையில் இறங்கினர். மாணவியை கடத்திய 3 பேரில் நந்தகோபால் என்ற நபரை மட்டும் அடையாளம் கண்ட மாணவிகள் அதனை போலீசாரிடம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கடத்தப்பட்ட மாணவியை நந்தக்கோபால் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததையும் தன்னை திருமணம் செய்யகோரி தொந்தரவு செய்து வந்ததும் போலீசுக்கு தெரியவந்திருக்கிறது. உடனடியான மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாணவியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. 
 
இதில் நந்தகோபாலின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து அதன் சிக்னலை FOLLOW செய்தனர் போலீசார். இதில் திண்டுக்கல் குஜிலியம்பாறை பகுதியில் நந்தகோபால் இருப்பது போலீசுக்கு தெரியவர சம்பவ இடத்திற்கு விரைந்துச்சென்று கடத்தல் கும்பலை கொத்தாக தூக்கிய போலீசார் மாணவியையும் பத்திரமாக மீட்டனர்.

நந்தகோபாலை பிடித்து நடத்திய விசாரணையில் போலீசுக்கு பல TWIST-கள் காத்திருந்தன. அதாவது கடத்தப்பட்ட மாணவி நந்தகோபாலுக்கு தாய் மாமன் உறவு என்றும் குடும்பத்தோடு மாணவியை பெண் கேட்டு சென்ற இடத்தில் மாணவியின் பெற்றோர் பெண் தர மறுத்த ஆத்திரத்தில் கடத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி மாணவியை திருமணம் செய்துகொள்ளும் ஆசையில் இருந்த நந்தகோபால் அந்த ஆசை நிராசையான கோபத்தில் மாணவியின் போட்டோவையும் தன்னுடைய போட்டோவையும் வைத்து சினிமா காதல் பாடல் ஒன்றை BACKGROUND-ல் கோர்த்து சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டதாக தெரிகிறது. 

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோருக்கும் நந்தகோபால் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் குடும்பத்தாரின் தூண்டுதல் பேரில் மாணவியை கடத்தியிருக்கிறார் நந்தகோபால். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட நந்தகோபால் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் நந்தகுமாரின் தாய் கலாவையும் கைது செய்தனர்.

Night
Day