கள்ளக்குறிச்சி: செல்போன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சிக்கும் மர்ம நபரின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன.
வெள்ளிமலைப்பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு இரவு நேரத்தில் செல்லும் மர்ம நபர், அங்கிருந்த டியூப் லைட்டை கழற்றி எறிந்துவிட்டு, இரும்பு ராடால் பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளார். சேராப்பட்டு மற்றும் கரியாலூர் கிராமங்களிலும் அடிக்கடி கடைகளில் கொள்ளை நடைபெறுவதாகவும், திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day