கள்ளச்சாராயம் அருந்தி ஒருவர் உயிரிழந்த விவகாரம் - 4 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் தங்கராசு என்பவர் கள்ளச்சாராயம்  அருந்தி உயிரிழந்த விவகாரத்தில் கோவிந்தராஜ் உள்ளிட்ட 4 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி ஜூம்மா பள்ளிவாசல் அருகே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து அவரது ரத்த மாதிரிகளும் சோதனை செய்த போது, தங்கராசு மெத்தனால் கலந்த சாராயம் குடித்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா மற்றும் தாமோதரன், பரமசிவன் ஆகிய 4 பேர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து 4 பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்களை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, ஏற்கனவே கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் 68 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பதன் மூலம் பலி எண்ணிக்கை 69-ஆக உயர்ந்துள்ளது.

Night
Day