காதலனுக்‍கு தேநீரில் எலிபேஸ்ட் கலந்து கொடுத்த காதலி தலைமறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே காதலை கைவிட நினைத்த காதலனை தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற காதலியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிரிமேடு கிராமத்தை சேர்ந்த ஜெயசூர்யா என்ற இளைஞரும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ரம்யா என்ற கல்லூரி மாணவியும் சில ஆண்டுகளாக காதலித்துள்ளனர். உறவு முறையில் இருவரும் அண்ணன், தங்கை என்று குடும்பத்தினர் கண்டித்ததால் ஜெயசூர்யா தனது காதலை கைவிட்டுள்ளார். இதனை ஏற்க மறுத்த ரம்யா, தனது காதலன் ஜெயசூர்யாவுக்‍கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.  அதைக்‍குடித்த அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day