காதலிப்பதாக கூறி 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காதலிப்பதாக கூறி 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


கடந்த 2022-ஆம் ஆண்டு புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்தததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் கார்த்திக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணையில்  குற்றம்சாட்டப்பட்ட கார்த்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி தீர்ப்பளித்தார். 

Night
Day