எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே காதலை மறுத்த காதலியை வீடு தேடி சென்று காதலன் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கோட்டை அடுத்த கற்குடி பகுதியை சேர்ந்த திருமலைக்குமார் என்ற இளைஞரும், தெற்குமேடு பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமலைக்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் காதலை கைவிடுமாறு இளம் பெண் கேட்டுள்ளார். மேலும், இளைஞரிடம் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். இதனால், மனமுடைந்த இளைஞர் திருமலைக்குமார் தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு இளம்பெண் வீடு தேடி சென்று பெண்ணை சரமாரியாக வெட்டியுள்ளார். இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய பெண்னை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த புளியரை போலீசார் திருமலைக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.