கிருஷ்ணகிரி கூட்டு பாலியல் வன்கொடுமை

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரியில் தர்காவிற்கு சென்ற இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரு இளைஞர்களை போலீசார் சூட்டு பிடித்தனர்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள மலையின் மேல் உள்ள தர்காவில் சாமி கும்பிடுவதற்காக, திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த 35 வயது ஆணும், அவரது உறவினரான 30 வயது பெண்ணும் சென்றுள்ளனர். வெயிலின் காரணமாக இருவரும் மலை மேலே ஓய்வு எடுத்துள்ளனர். அப்போது அங்கு வந்த 4 இளைஞர்கள் அவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த நகைகளை பறித்துள்ளனர். மேலும், கூகுள் பே மூலம் 7 ஆயிரம் ரூபாயையும் வாங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி பெண்ணை வலுக்காட்டயமாக நான்கு பேரும் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தும், அதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அபிஷேக், கலையரசன் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்ற இருவர்களை பிடிக்க சென்றபோது இரு காவலர்கள் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் பாதுகாப்பிற்காக சுரேஷ் என்பவரை வலது காலில் சுட்டு பிடித்தனர். மேலும் மற்றொருவரான நாராயணன் ஓடும் போது எலும்பு முறிவு ஏற்பட்டு கீழே விழுந்தார். இந்நிலையில் இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Night
Day