கிருஷ்ணகிரி: இஸ்லாமிய பெண்ணை குடும்பத்தினர் தாக்கிய வீடியோ வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுப்பது தொடர்பான பிரச்சனையில் ஒரு குடும்பத்தார், இஸ்லாமிய பெண்ணை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. குண்டலப்பட்டி கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் இருந்து வெண்ணிலா என்பவர் தாங்கள் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு தண்ணீர் எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஷாகிரா என்ற இஸ்லாமிய பெண், குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் எனவும், தான் தண்ணீர் பிடித்த பிறகு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெண்ணிலாவும், அவரது மகன்களும் சேர்ந்து ஷாகிராவை தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Night
Day