கிருஷ்ணகிரி: மனைவியை குத்திக் கொன்றுவிட்டு தப்ப முயன்ற கணவன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி அருகே மனைவியை குத்தி கொன்ற கணவனை பெண்ணின் உறவினர்கள் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னமுத்துவும் அவரது மனைவி சீதாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே நேற்றிரவு மது அருந்திவிட்டு மனைவியை அழைக்க சென்ற சின்னமுத்து, மனைவி தன்னுடன் வர மறுத்ததால் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் மனைவி சீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சின்னமுத்து தப்பியோடிய நிலையில், பெண்ணின் உறவினர்கள் அவரை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுபிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். படுகாயங்களுடன் சின்னமுத்துவை கைது செய்த போலீசார், நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்திய பெண்ணின் உறவினர்கள் 3 பேரை கைது செய்தனர்.

varient
Night
Day