குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக  செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த  வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் குற்றச்சாட்டை பதிவு தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொளி மூலம் குற்றச்சாட்டுப்பதிவு செய்ய ஆட்சேபம் இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்தது. இதனையடுத்து நேரில் ஆஜரப்படுத்தப்படவில்லை என்றால் காணொளி மூலம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என கூறி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். 

Night
Day