கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வழக்‍கு : தந்தை, 2 மகன்களுக்‍கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வழக்‍கில் தந்தை மற்றும் இரு மகன்களுக்‍கு பெரிகுளம் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

குள்ளப்புரம்‌ பகுதியைச் சேர்ந்த சித்திரன் என்ற கூலித் தொழிலாளிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த துரைபாண்டி என்பவருக்‍கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் துரைபாண்டி, அவரது சகோதரர் பெரியபாண்டி மற்றும் தந்தை பரமன் ஆகியோரால் தாக்குதலுக்குள்ளான சித்ரன், தேனி அரசு மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்‍கப்பட்டார். இதுதொடர்பான வழக்‍கை விசாரித்த பெரியகுளம் நீதிமன்ற நீதிபதி மாரியப்பன், குற்றவாளிகள் துரைப்பாண்டி, பெரியபாண்டி, பரமன்‌ ஆகிய 3 பேருக்கும்‌ 7 ஆண்டுகள்‌ சிறை தண்டனையும்‌, தலா 5 ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Night
Day