கூல் லிப், குட்காவை தடை செய்ய விரைவில் உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக்கூடாது என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், கூல் லிப் புழக்கங்கள் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பான வழக்குகளில் ஜாமீன் கோரி அதிகளவில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கூல் லிப் குட்கா வகைகளை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர்களின் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கூல் லிப் புகையிலை பொருட்களை இளைஞர்களை தாண்டி பள்ளி மாணவர்களே அதிகம் பயன்படுத்துவதாக வேதனை தெரிவித்தார். இதனால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளதாகவும், இதில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்த நீதிபதி, கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக்கூடாது என கேள்வி எழுப்பினார். இதுபோல் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே கூல் லிப்பை முற்றிலும் தடை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

Night
Day