கை கொடுத்த Good Touch Bad Touch... கம்பி எண்ணும் காமுகன்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டபூர்வமாக மகள்களாக தத்தெடுத்த இரண்டு பெண் குழந்தைகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திட்டமிட்டு பாலியல் சிண்டலுக்காக குழந்தைகளை தத்தெடுத்த  மிருகம் செய்த செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

குழந்தை செல்வம் இல்லாத பல தம்பதிகள் முதலில் நாடுவது ஆதரவற்ற இல்லங்களை தான். அப்படி ஒரு ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்து வந்த இரண்டு பிஞ்சுகள் தங்களை உயிராக நேசிக்கும் ஒரு தாய் தந்தை வருவார்கள், நம்மை கண் போல் காத்து வளர்ப்பார்கள் என்று அந்த உலகம் ஏக்கத்துடன் காத்திருந்த சமயத்தில் வந்தவர் தான் எட்வர்ட் துரை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 63 வயதான எட்வர்ட் துரை.  முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருந்த நிலையில் திடீரென சில வருடங்களுக்கு மகன் முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வயதான காலத்தை தனிமையில் கழித்த எட்வர்ட் துரையும் அவரது மனைவியும் தங்களுக்கென துணை வேண்டும் என எண்ணி திருச்செங்கோடு அருகே உள்ள அனாதை ஆசிரமம் ஒன்றில் இருந்து 11 மற்றும் 12 வயது கொண்ட சகோதரிகளான இரண்டு பெண் குழந்தைகளை முறைப்படி தத்தெடுத்து வந்துள்ளனர். 

சில மாத காலம் டிரையல் மெத்தட் என்ற முறையில் தத்தெடுக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாக பரிபூரண திருப்தியுடன் உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த இரு குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. 

இரண்டு மாதங்கள் குழந்தைகளுக்கு நல்லவிதமாக சென்ற நிலையில் எட்வர்டின் மனைவி ஊருக்கு சென்ற நிலையில் தனது சுய ரூபத்தை காட்ட துவங்கினார் எட்வர்ட் துரை. ஆதரவற்ற இல்லத்திலிருந்து அழைத்து வரப்பட்ட குழந்தைகள் தானே இவர்களுக்கு என்ன தெரிய போகிறது என எண்ணிய எட்வர்ட், கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுக்கு ஆபாச படங்களை போட்டு காண்பித்துள்ளார். அதன்பின்னர் குழந்தைகளை கண்காணித்த எட்வர்ட், லேசாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

குழந்தைகளும் அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் சாதரணமாக இருந்து வந்த நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட எட்வர்ட், தொடர்ந்து குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். குழந்தைகளுக்கு ஆதரவற்றோர் இல்லத்தில் பயிற்றுவிக்கப்பட்ட குட் டச் பேட் டச் பற்றி தெரிந்ததால் தங்களது வளர்ப்பு தந்தை தங்களிடம் தவறாக நடக்கிறார் என புரிந்து கொண்டனர் அந்த அப்பாவி சிறுமிகள் . நாளுக்கு நாள் எட்வர்டின் செயல் மோசமாக மோசமாக  இனிமேல் இங்கிருப்பது ஆபத்து என உணர்ந்த சிறுமிகள், எப்படியாவது எட்வர்டிடமிருந்து தப்பி விட வேண்டும் என எண்ணி துணிச்சலுடன் சென்று சைல்ட் ஹெப்ல் லைன் நபருக்கு போன் செய்து தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை விளக்கியுள்ளனர். 

விஷயத்தின் விபரீதத்தை புரிந்து கொண்ட சைல்ட் ஹெல்ப்லைனை சேர்ந்தவர்கள் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து, நேரில் வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், எட்வர்ட் துரையை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 

சரியான நேரத்தில் சமயோசிதமாக செயல்பட்ட இரண்டு சிறுமிகள் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளனர்.  இதே போன்று அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ஆண் குழந்தைகளும் குட் டச் பேட் டச் என்பது குறித்து பெற்றோர்கள் சொல்லி வளர்க்க வேண்டும். அப்படியானால் மட்டுமே இந்த இரண்டு குழந்தைகள் அல்ல எந்த ஒரு குழந்தையும் நிச்சயம் பாதிக்கப்படாது என்பதே நிதர்சனமான உண்மை.

Night
Day