கோவை: பேருந்தில் கைக்குழந்தையை இளம்பெண்ணிடம் கொடுத்துவிட்டு தலைமறைவான தாய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை நகர பேருந்தில் 5 மாத கைக்குழந்தையை இளம் பெண்ணிடம் கொடுத்து விட்டு தாய் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண் கோவையில் ஆடிட்டிங் படித்து வருகிறார். இவர் நேற்று காந்திபுரத்தில் இருந்து தனியார் நகர பேருந்தில் வந்து கொண்டிருந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கைக்குழந்தையுடன் நின்று இருந்த பெண் ஒருவர் குழந்தையை திவ்யாவிடம் கொடுத்துள்ளார். திவ்யா இறங்குவதற்காக தாயை தேடிய போது அவரை காணாததால் நடத்துனரிடம் தெரிவித்துள்ளார். பேருந்து முழுவதும் தேடியும் தாய் கிடைக்காததால் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், குழந்தையை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தை பராமரிப்பு வார்டில் ஒப்படைத்தனர். 

varient
Night
Day