சங்கரன்கோவில் : பீரோவை உடைத்து 58 சவரன் நகைகள் கொள்ளை : 24 மணிநேரத்தில் கொள்ளையர்களை பிடித்த தனிப்படை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வருவாய் ஆய்வாளர் வீட்டில் 58 சவரன் நகைகளை திருடிய பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பனவடலிசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் கஸ்தூரியும் அவருடைய கணவரும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு, பீரோ ஆகியவை உடைக்கப்பட்டு 58 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கொள்ளையில் ஈடுபட்ட கொம்பன் குமார், சரோஜா, கார்த்திக், வேல்முருகன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 40 சவரன் நகைகளை மீட்டனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு தென்மண்டல ஐஜி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். 

Night
Day