சங்கரன்கோவில் : வேன் ஓட்டுநர் முருகனை அடித்துக் கொன்ற போலீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசியில் மர்மமான முறையில் உயிரிழந்த வேன் ஓட்டுநர் உடலில் 9 இடங்களில் காயம் இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.

வடக்குப்புதுர் வேன் ஓட்டுநர் முருகனை கடந்த 8-ஆம் தேதி சங்கரன்கோவில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் மர்மமாக உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள் புகாரின்படி முருகனை தாக்கிய காவலர்கள் மணிராஜ், கல்யாணதுரை, மதன் ஆகியோரை எஸ்பி பணியிடை நீக்கம் செய்தார். இந்த நிலையில் முருகன் உடலில் 9 இடங்களில் காயம் இருந்ததாகவும், தாக்குதல் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை உடற்கூராய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முருகனின் உடலை பெற்றுக் கொள்ள வேண்டுமென போலீஸ் தரப்பில் உறவினர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

Night
Day