சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு - குவாரி உரிமையாளர் ராமையா சரண்

எழுத்தின் அளவு: அ+ அ-

சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கல்குவாரி உரிமையாளர் ராமையா புதுக்கோட்டை நமனசமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருமயம் பகுதியில் நடைபெறும் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் போலீசாரின் செயல்பாடுகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்ததால் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த கல்குவாரி உரிமையாளர் ராமையா, நமனசமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Night
Day