சவுக்கு சங்கருக்கு ஜாமீன் : உதகை நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு உதகை நீதித்துறை நடுவர் நீதி மன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி சமூக வலைதளத்தில் அவதூறாக பேசியது தொடர்பாக  வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனிடையே உதகை புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லி ராணி என்பவர் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்நிலையில் இன்று அந்த வழக்கு உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே விவாதம் நடைபெற்ற நிலையில் நீதிபதி தமிழ் இனியன், சவுக்கு சக்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Night
Day