சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு பெண் காவலர் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்டத்தில் மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கடந்த 15ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக நீதிபதியிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது பாதுகாப்புக்காக சென்ற திருவெறும்பூர் உதவி காவல் ஆய்வாளரை சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உதவி காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் திருச்சி கண்டோன்மென்ட அனைத்து காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது பல்வேறு மாவட்டங்களில் 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day