சவுதி அரேபியாவில் ஆயுள் தண்டனை - மத்திய அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்கமுடியும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொலை வழக்கில் சவுதி அரேபியாவில் ஆயுள் தண்டனை அனுபவிப்பவரை மீட்பது தொடர்பாக மத்திய அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடலூரை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்த போது, கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக தண்டனை அனுபவிக்கும் பாண்டுரங்கனை மீட்க சட்டப்படியான உதவிகளை கேட்டு அவரது தாய் சரோஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறைக் கைதிகளை பரஸ்பரம் மாற்றிக்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் இருந்தாலும் அதனை செயல்படுத்துமாறு தாங்கள் உத்தரவிட முடியாது என தெரிவித்தனர். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அணுகலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Night
Day