சாலையில் நடந்த சென்றவரை கல்லால் தாக்கி செல்போனை பறித்துச் சென்ற 3 சிறுவர்கள்- அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்த சென்ற நபரை 3 சிறுவர்கள் கல்லால் கொடூரமாக தாக்கி செல்போனை பறித்துச் சென்ற பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காஞ்சிபுரத்தை சேர்ந்த டேவிட் ராஜான் என்பவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் தனது நண்பரை சந்திப்பதற்காக வந்துள்ளார். பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் பூந்தோட்டத்தில் இருந்து பேருந்து நிலையம் செல்வதற்காக பெங்களூரு சாலை வழியாக செல்போனில் பேசியபடி டேவிட் ராஜன் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த 13, 15 மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்கள் திடீரென டேவிட் ராஜனை கல்லால் தாக்கியுள்ளனர். எதிர்பாராத இந்த திடீர் தாக்குதலால் டேவிட் ராஜன் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.

தொடர்ந்து கீழே விழுந்த டேவிட் ராஜன் மீது மீண்டும் கல்லால் தாக்கிவிட்டு அவரது செல்போனைப் பறித்துக் கொண்டு 3 சிறுவர்களும் தப்பியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிருஷ்ணகிரி போலீசார், நடுச்சாலையில் விழுந்து கிடந்த டேவிட் ராஜனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்களையும் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

Night
Day