சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


எம்.புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த முனியப்பன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் முனியப்பனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான, வழக்கு விசாரணை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி முனியப்பனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  

Night
Day