சிறுமி பலி - பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

எழுத்தின் அளவு: அ+ அ-

தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கடந்த 3ம் தேதி விழுப்புரம் விக்கிவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இவ்வழக்கில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். 

varient
Night
Day