சிலை கடத்தல் விவகாரம் : பொன். மாணிக்‍கவேலுக்‍கு முன்ஜாமீன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக சிபிஐயால் பதியபட்ட வழக்கில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேலுக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நிபந்தனையுடன் கூடிய முன்​ஜாமீன் வழங்கியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இருந்த பழமையான சிலைகளை கடத்தி விற்பனை செய்ததாக 
திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர் பாஷா உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காதர்பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே பொன் மாணிக்கவேல் தன் மீது பொய் வழக்‍கு போட்டு இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் காதர்பாஷா வழக்‍கு தொடர்ந்தார். 

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி, பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, பொன் மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி தாக்‍கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நீதிபதி பரத சக்‍கரவர்த்தி, சிலை கடத்தல் பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நான்கு வார காலத்திற்கு காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், இரு நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும்; 25 ஆயிரம் ரூபாய் வைப்பு தொகையாக வழங்க வேண்டும் என நிபந்தனைகளுடன் முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

Night
Day