சீர்காழி அருகே 3 வயது குழந்தையை கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீர்காழி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, கல்லால் தாக்கி கண்ணை சிதைத்த சிறுவனை போக்சோவில் போலீஸார் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.  

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளான 3வயது குழந்தை அருகில் உள்ள அங்கன்வாடிக்கு சென்ற நிலையில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு திடீரென மாயமாகியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் சிறுமியை தேடிய நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுமியின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்த போது சிறுமி தலை மற்றும் கண் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், சிறுமி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கூச்சலிட்டதால் கல்லால் தாக்கி தலை மற்றும் முகத்தை காயப்படுத்தியதாக தெரிவித்துள்ளான். இதையடுத்து   சிறுவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Night
Day