சுமார் 11 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெளிநாட்டில் இருந்து டெல்லிக்‍கு கடத்தி வரப்பட்ட சுமார் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதை பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் வெளிநாட்டில் இருந்து விமானங்களில் டெல்லி வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
அ​ப்போது எத்​தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து டெல்லி வந்த ஒரு பயணியிடம் இருந்து ஆயிரத்து 96 கிராம்  கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் 11 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதை பொருளை கடத்தி வந்த நபரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

Night
Day