செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் கொலை வெறி தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கொலை வெறி தாக்குதலின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பொன்விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவருக்கும் இவரது பங்காளிகளுக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மோதலாக மாறியுள்ளது. இதில் படுகாயமடைந்த கீதா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை கீதாவின் தம்பி கார்த்திக் என்பவர் காணவந்த நிலையில் அதனை தெரிந்து கொண்ட மற்றொரு தரப்பினர் அங்கு வந்து கார்த்திக்கை தாக்கினர். இருதரப்பும் அவசர சிகிச்சை பிரிவில் மாறி மாறி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதால் நோயாளிகள் நாலாபுறமும் தலைதெறிக்க ஓடினர்.

Night
Day