செந்தில்பாலாஜி காவல் ஆகஸ்ட் 16 வரை நீட்டிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக  செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற காவல் வரும் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குக்காக செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். பின்னர், செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிபதி அல்லி வாசித்தார். பின்னர் பேசிய நீதிபதி அல்லி, தவறு என்று தெரிந்தே பலரிடம் லஞ்சம் பெற்றுள்ளீர்கள், இதை ஒப்பு கொள்கிறீர்களா என செந்தில் பாலாஜியிடம்  கேள்வி எழுப்பினார். மேலும், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான மின்னனு ஆதாரங்கள் அமலாக்கத்துறையால் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் , குறிப்பிட்ட காலகட்டத்தில் செந்தில் பாலாஜி வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக கூறி பெறப்பட்ட லஞ்ச பணம் என குற்றச்சாட்டு உள்ளதாக நீதிபதி தெரிவித்தார். 

இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 16-ம் தேதி வரை நீட்டித்து  நீதிபதி உத்தரவிட்டார். 

Night
Day