செந்தில் பாலாஜி வழக்கு - நாளை மீண்டும் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பட்டது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 11 மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், மீண்டும் ஜாமீன் கோரியும் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். இதனை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணை இன்று  நடைபெற இருந்த நிலையில், நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Night
Day