எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவரை கத்தியால் குத்தி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் பகுதியை சேர்ந்தவர் பெண்மணி. இவர் மருத்துவத்துறையில் ஓய்வு பெற்று தனது மகள், மருமகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பெண்மணி வீட்டில் தனியாக இருந்த போது, அங்கு வந்த நபர்ஸ ஒருவர் ஆன்லைனில் மருந்துகள் ஆர்டர் செய்ய வந்துள்ளதாக கூறியுள்ளார். இதனை நம்பிய பெண்மணி அவரை உள்ளே அழைத்து மருந்துகளை கேட்டுள்ளார். அப்போது, பையில் இருந்து கத்தியை எடுத்து அந்த பெண்ணின் கையில் குத்திவிட்டு பணம் மற்றும் நகையை கேட்டு அந்த நபர் மிரட்டி உள்ளார். இதனை கண்ட அவரது வீட்டில் பணி புரியும் பெண் கத்தி கூச்சலிட்டதால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகமுத்து என்பவரை கைது செய்தனர்.