சென்னையில் போதை மாத்திரை விற்ற பெண் கைது - 5 இளைஞர்கள் சிறையில் அடைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை காசிமேடு பகுதியில் வாடகை வீட்டில் வைத்து விற்கப்பட்ட ஆயிரத்து 900 போதை மாத்திரைகள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வட சென்னையில் போதை மாத்திரை விற்கப்படுவதாக காசிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஜி.எம்.பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது, காசிமேட்டில், ரவுடி மதனின்  19 வயது மனைவி மசியா, புதிதாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்ததும், ஆன்லைன் மூலம் மாத்திரைகளை வாங்கி விற்றதும் தெரியவந்தது. 21 வயது பிரதீப், 19 வயது அஜய், 22 வயது பரத்குமார், சாம்சன், பிரகாஷ் ஆகிய 6 பேரும் சேர்ந்து விற்றது தெரியவந்தது. இதில், ரவுடி மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

varient
Night
Day