சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு - கூடுதல் விவரங்கள் திரட்ட காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இருபது லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் கூடுதல் விவரங்களை திரட்ட காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் கடந்த டிசம்பர் 11-ம் தேதி 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்ததாக காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி உதவி ஆய்வாளர்கள் இருவரும் தாக்கல் செய்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் இருவரும் இந்த வழக்கின் முக்கிய நபர்கள் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் கூடுதல் விவரங்களை திரட்டுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Night
Day