எழுத்தின் அளவு: அ+ அ- அ
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லியில் கைதான ஜாஃபர் சாதிக் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் 5 மணிநேரத்திற்கும் மேலாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக பிரமுகருமான ஜாஃபர் சாதிக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான அவரை, கடந்த 9ஆம் தேதி டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனையடுத்து, ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரித்து வரும் அதிகாரிகள், அவரது நெருங்கிய கூட்டாளியான சதானந்தம் என்பரையும் கைதானார்.
இந்நிலையில், டெல்லியில் இருந்து ஜபார் சாதிக்கை சென்னை அழைத்து வந்த அதிகாரிகள், அயப்பாக்கம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் 5 மணிநேரத்துக்கும் மேலாக விசாணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 23 நபர்களுக்கு தொடர்ச்சியாக போதைப் பொருட்களை வழங்கியதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அவர் அளித்த செல்போன் எண்களைக் கொண்டு போதைப் பொருள் வாங்கியவர்களை தேடும் பணியில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.