சென்னை : ஆழ்வார்பேட்டையில் சேக்மேட் பஃப்பின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சேக்மேட் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள சேக்மேட் என்கிற கேளிக்கை விடுதியின் முதல் தளத்தில் உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் திரையிடப்படும் பகுதியில் நேற்று திடீரென கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், கீழ்தளத்தில் இருந்த பணியாளர்களான திருச்சியை சேர்ந்த சைக்ளோன் ராஜ், மணிப்பூரை சேர்ந்த திருநங்கை லில்லி மற்றும் மேக்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் உடல்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் பாரின் மேலாண் இயக்குனர் அசோக் என்பவரது பெயரில் உரிமம் பெற்று செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், கட்டிடத்தின் அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அதன் காரணமாக விபத்து ஏற்பட்டதா மெட்ரோ ரயில் நிர்வாகத்திடமும் மயிலாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், விபத்துக்கு மெட்ரோ கட்டுமான பணிகள் காரணமல்ல என மெட்ரோ நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்குள்ளான கட்டத்திலிருந்து 240 அடி தள்ளியே பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், எந்த அதிர்வுகலும் கட்டத்தில் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாரின் பொறுப்பாளர் சதீஷ் யாதவ் என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

varient
Night
Day