சென்னை : மருத்துவக் கல்லூரி மாணவரை துப்பாக்கியால் சுட முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பூக்கடையில் மருத்துவ கல்லூரி மாணவரை டெல்லியை சேர்ந்த மாணவர் நாட்டு துப்பாக்கியால் சுட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை மருத்துவக் கல்லூரியில் ரோகன் என்ற மாணவர் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார். இவர் பூக்கடை பகுதியில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது டெல்லியை சேர்ந்த மாணவர் கஜராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கஜராஜை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில் துப்பாக்கியால் சுட முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Night
Day