க்ரைம்
சுரேஷ் ராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எதிரான நில மோசடி வழக்கை ரத்து செய்ய செ?...
சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் டிக்கெட் இருப்பதாக கூறி 25 ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு மோசடி செய்த போலி செக்யூரிட்டியை போலீசார் கைது செய்தனர். சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை - குஜராத் இடையேயான கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் மும்மரம் காட்டினர். இதனை பயன்படுத்திக் கொண்ட ஒருவர், மைதானத்தின் வெளியே காவலாளி போல் நின்று, தன்னிடம் ஐபிஎல் டிக்கெட் இருப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி போரூரை சேர்ந்த மென் பொறியாளரும், மற்றொரு 11ம் வகுப்பு படிக்கும் மாணவனும் டிக்கெட்டுக்காக 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நபர் டிக்கெட்டை வழங்காமல் ஏமாற்றிவிட்டு சென்றதால், பணத்தை பறிகொடுத்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் டிக்கெட் விற்ற நபரின் செல்போன் எண்ணை டிராக் செய்த போலீசார், கொடுங்கையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்தனர்.
முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எதிரான நில மோசடி வழக்கை ரத்து செய்ய செ?...
கர்நாடகா சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மீதான தவறான ...