க்ரைம்
பாலியல் புகார் அளித்த சிறுமி மீது அரிவாளால் கொடூர தாக்குதல்..!
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 43லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை மாதவரத்தை சேர்ந்த பிராங்ளின் டேனியல் என்பவர் விருகம்பாக்கத்தில் FPS எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை நடத்தி வரும் ரவி செல்லையாவை அணுகி தன்னை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்ப விண்ணப்பித்துள்ளார். அவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்ட ரவி செர்பிய நாட்டில் லிப்ட் ஆப்ரேட்டர் வேலை வாங்கி தருவதாக கூறி இலங்கைக்கு விசா எடுத்துக் கொடுத்து மோசடி செய்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதேபோல் மேலும் 26 நபர்களை ஏமாற்றிய ரவி யாருக்கும் தெரியாமல் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார். இதனை அடுத்து தலைமறைவான ரவி செல்லையாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...