க்ரைம்
சென்னை எண்ணூரில் 111 டைக்கின் ஏசி திருட்டு
ஆந்திராவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னரில் வந்த ஏசி பெட்ட?...
சென்னை ராயபுரத்தில் வீட்டில் வைத்திருந்த 31 சவரன் நகைகளை திருடிய பெண் மற்றும் அவருடைய காதலனை போலீசார் கைது செய்தனர். ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் தற்போது வசிக்கும் வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பதால் தனது நகைகளை பிரைடன் தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் கொண்டு சென்று வைத்துள்ளார். இந்நிலையில் தாய் வீட்டிற்கு வந்த சங்கீதா நகைகளை எடுப்பதற்காக பிரோவில் பார்த்த போது அவைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வரும் சங்கீதாவின் தங்கை ரேவதி தனது காதலனுடன் சேர்ந்து நகைகளை திருடியது தெரியவந்தது.
ஆந்திராவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னரில் வந்த ஏசி பெட்ட?...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...