க்ரைம்
பெண்கள் விடுதியில் புகுந்து பாலியல் அத்துமீறல்
சென்னை கீழ்பாக்கம் பெண்கள் விடுதியில் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடு?...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, நகைக் கடைக்கு பர்தா அணிந்து வந்த இளம்பெண், கவரிங் நகைகளை கொடுத்து, ஏழரை சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற காண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன. வாழப்பாடி அருகே பேளூரில் இயங்கும் ஈஸ்வர் நகைக் கடைக்கு கடந்த 14-ஆம் தேதி பர்தா அணிந்த இளம்பெண் ஒருவர் நகை வாங்குவது போல் வந்துள்ளார். தான் அணிந்திருந்த நகைகளை, கடை ஊழியர்களிடம் கழட்டி கொடுத்த அவர், அதற்கு மாற்றாக ஏழரை சவரன் தங்க நகைகளைப் பெற்று சென்றார். 12 நாட்களுக்கு பிறகு தங்க நகைகளை, கடை ஊழியர்கள் ஆய்வு செய்த போது, அந்த பெண் கொடுத்த நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என தெரியவந்தது. இதனையடுத்து நகை கடை ஊழியர் அளித்த புகாரின் பேரில், வாழப்பாடி காவல்துறையினர் பர்தா அணிந்த பெண்ணை தேடி வருகின்றனர்.
சென்னை கீழ்பாக்கம் பெண்கள் விடுதியில் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடு?...
சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ...