சேலம்: நிலத்தகராறில் கணவன் மனைவிக்‍கு அரிவாள் வெட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நிலத்தகராறில் தம்பதியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் - ஜோதி தம்பதிக்‍கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு செல்லும் வழித்தடத்தில் பிரச்சனை இருந்துவந்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில், அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், செந்தில்குமார், இளையராஜா ஆகியோர், காமராஜையும், அவரது மனைவி ஜோதியையும் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வழக்‍குப்பதிவு செய்த போலீசார், கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்திவிட்டு, தலைமறைவாக உள்ள மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Night
Day