சேலம்: 2ம் வகுப்பு மாணவனை மர்ம நபர்கள் கடத்த முயன்றதாக குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 2ம் வகுப்பு மாணவனை மர்ம நபர்கள் கடத்த முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திட்டச்சேரி பகுதியில் வசித்து வரும் ரமேஷ்-அன்னக்‍கிளி தம்பதியரின் மகன் அபினேஷ், அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.  ரமேசும் அன்னக்‍கிளியும் கூலிவேலைக்‍கு சென்ற நிலையில், சிறுவன் அபினேஷ் பள்ளிக்‍கு புறப்பட்டுக்‍ கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் நுழைந்த இரண்டு மர்மநபர்கள், அபினேஷின் வாயில் துணிவைத்து அடைத்து, கை, கால்களை கட்டி தூக்‍கிச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பொதுமக்‍களை பார்த்ததும், அந்த நபர்கள், சிறுவனை அங்குள்ள முட்புதரில் வீசிவிட்டுச் சென்றதாக தெரிகிறது. குழந்தையை மீட்ட பொதுமக்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

varient
Night
Day