சொத்துக்காக தந்தையை வேனை ஏற்றி கொன்ற மகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் சொத்துக்காக தந்தையை வேனை ஏற்றி கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். பாரிவாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தந்தை ராஜேந்திரன் வைத்திருக்கும் 4 சென்ட் நிலத்தை தனக்கு எழுதி தரும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தான் ஓட்டும் வேனை எடுத்து தந்தை ராஜேந்திரம் மீது ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியோடினார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day