ஜாகிர் உசேன் கொலை சம்பவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என அவரின் மகன் வீடியோ வெளியிட்டு குமுறல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் ஓய்வுப்பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என அவரது மகன் வீடியோ வெளியிட்டு குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவரின் மகன் வெளியிட்ட வீடியோவில், தன் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் எனவும், முதலமைச்சர், காவல் கண்காணிப்பாளர் என உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தன் தந்தை கொலை செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார். சேவை மனப்பான்மையுடன் தன் தந்தை பல செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறிய ஜாகிர் உசேன் மகன், காவல்துறையில் பணியாற்றிய தனது தந்தைக்கே இந்த நிலைமை என்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவில் இருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக தெரிவதாக கூறினார்.

Night
Day