ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் நவ.11ல் ஆஜராக உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாபர் சாதிக் மற்றும் இயக்குனர் அமீர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜாபர் சாதிக் மற்றும் இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் நவம்பர் 11-ம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கடத்திய போதைப் பொருட்களை விற்பனை செய்த பணத்தில் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்திற்கு  மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எழில்வேலவன், ஜாபர் சாதிக், அவரது மனைவி, சகோதரர் மற்றும் நடிகர் அமீர், உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

Night
Day