ஜூஸ்-ஜாக்கிங் தொழில்நுட்பத்துடன் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அடாப்டர் மூலம் தொலைபேசிக்கு சார்ஜ் செய்வதால், தங்களின் தகவல்களை திருடும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கையில், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அடாப்டர் மூலம் சார்ஜ் செய்வதால், ஜூஸ்-ஜாக்கிங் என்ற தொழில்நுட்பத்துடன் பயணரின் தரவுகளை திருடி மோசடியில் ஈடுபடுவதாக கூறியுள்ளது. மேலும் விமான நிலையம், பேருந்து நிலையம் ஆகிய பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அடாப்டரில் சார்ஜ் செய்வதால், இணையவழி குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், வெளியில் பயணிக்கும்போது, தங்களின் சாதனங்களை பயன்படுத்தி சார்ஜ் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளது.

varient
Night
Day