ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான, ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 23ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், திமுக பிரமுகரான ஞானசேகரன் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கைதான ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், முதல் நாளான இன்று ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஞானசேகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப்டாப், பென் டிரைவ் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day