டிஐஜி வீட்டருகே 200 சவரன் கொள்ளை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை காவல்துறை டிஐஜி வீட்டின் அருகே தொழிலதிபர் வீட்டின் கதவை உடைத்து சுமார் 200 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.

சென்னை நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலையில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் எஸ்.பி கார்டன் என்ற தனியார் குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்பில் தமிழ்நாடு காவல்துறை டிஐஜி வீட்டின் அருகே தொழிலதிபர் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கதவை மர்ம நபர்கள் பெரிய பாறாங்கல்லைக் கொண்டு உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 200 சவரன் நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நொளம்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

varient
Night
Day