க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். சென்னை முன்னாள் காவல் ஆணையரும் தமிழ்நாடு காவலர் பயிற்சிக் கல்லூரி இயக்குநருமான டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் பெயரில் முகநூல் தொடங்கிய மர்ம நபர்கள், போலீஸ் அதிகாரி என்று கூறி தேனாம்பேட்டையைச் சேர்ந்த சுனில் என்பவரிடம் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருட்களை கொடுப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய சுனில் ஜிபே மூலம் 30 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால் எந்த பொருளும் வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுனில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...