டெல்லி விமான நிலையத்தில் ரூ.40 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 40 கோடி மதிப்பிலான கொக்கைன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் தலைநகர் டெல்லிக்கு சிலர் போதை பொருட்கள் கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பிரேசில் மற்றும் கென்யாவில் இருந்து வந்த விமான பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில், கொகைன் போதைப்பொருள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 2 கிலோ எடை கொண்ட கொக்கைன் போதை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 40 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day