க்ரைம்
சென்னை எண்ணூரில் 111 டைக்கின் ஏசி திருட்டு
ஆந்திராவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னரில் வந்த ஏசி பெட்ட?...
டெல்லியில் 100 ரூபாய்க்கு உயிர் காக்கும் மருந்து என்ற போர்வையில் போலி ஊசி மருந்து விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். புற்றுநோயில் இருந்து உயிரை காக்கும் மருந்து எனக்கூறி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஊசி மருந்தை பலருக்கும் விற்று ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. பூஞ்சை எதிர்ப்பு மருந்தை குப்பிக்குள் அடைத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியதும் போலீஸ் விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவில் இந்த மருந்து ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், தாங்கள் 100 ரூபாய்க்கு விற்பதாகவும் கூறி, அப்பாவி மக்களை ஏமாற்றிய புற்றுநோய் மருத்துவமனை ஊழியர்களான கோமல் திவாரி மற்றும் அபினய் கோலி உள்ளிட்ட ஏழு பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். 89 லட்சம் ரூபாய் ரொக்கம், 4 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி புற்றுநோய் மருந்து உள்ளிட்டவையும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆந்திராவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னரில் வந்த ஏசி பெட்ட?...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...